அண்ணா நினைவு தினம் கோவில்களில் 1500 பேர் சமபந்தி பொது விருந்தில் கலந்து கொண்டனர்.
பேரறிஞர் அண்ணா 54 -வது நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொது விருந்தில் கலந்து கொண்டனர்.
அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு பொது விருந்து நடைபெற்றது இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் அதைத்தொடர்ந்து அருள்மிகு வழக்கறித்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் ஏழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் பொது விருந்தில் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினர். இதில் 500க்கும் மேற்பட்டோர் என மொத்தம் மூன்று கோவில்கள் நடைபெற்ற சம்பந்திப் பேரில் 1500- மேற்பட்டோர் இதில் கலந்து உணவருந்தினர்கள்.
இதில் திமுக நிர்வாகிகள் சந்துரு, திலகர், வரதராஜன் பலர் கலந்து கொண்டனர். பொது விருந்து ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, பூவழகி சீனிவாசன் , ஆகியோர் செய்திருந்தனர்.