BREAKING NEWS

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்காண மயிலாடுதுறை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்காண மயிலாடுதுறை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட அளவில் நடைபெறும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தனர்.

 

சாய் உள் விளையாட்டு அரங்கில் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். முன்னதாக மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர் சாமுவேலுக்கு ஆட்சியர் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

 

 

மேலும் பிப்ரவரி 23ஆம் தேதி வரை மயிலாடுதுறை, சீர்காழி, காட்டுச்சேரி உள்ளிட்ட ஐந்து விளையாட்டு மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. ஓட்டப்பந்தயம், கைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என 50 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.

 

பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என தகுதி வாரியாக தரம் பிரிக்கப்பட்டு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் 5000 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். வெற்றி பெறுபவர்களுக்கு கேடயங்களும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

 

செய்தியாளர்
க .சதீஷ்மாதவன்.

CATEGORIES
TAGS