BREAKING NEWS

தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

 

மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் 06.02.2023-ல் மாநிலம் தழுவிய ஒன்றிய அளவில் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின்போது கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. “தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு” என்றிருக்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் பொது வலியுறுத்திப்பட்டது.

 

 

தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

 

1) சத்துணவு – -அங்கன்வாடித் திட்டங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையாகஅகவிலைப்படியுடன் ரூ6750/மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் 

 

 

2) சத்துணவு – அங்கன்வாடி திட்டங்களில் பணிபுரிபவர்களுக்குமுறையானகாலமுறை ஊதியம் வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து அரசுத்துறைகளிலும் உள்ள நிரந்தர காலமுறை ஊதியத்திலான காலிப்பணியிடங்களில் 50% பணியிடங்களை ஒதுக்கி, அதில் தகுதியுள்ள சத்துணவு -அங்கன்வாடி ஊழியர்களைப்பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி ஈர்த்திட வேண்டும் எனவும்,

 

 

3) காலை சிற்றுண்டித் திட்டத்தைத்தனியாரிடம் ஒப்படைப்பதைக் கைவிட்டுசத்துணவுத்திட்டத்தில்இணைத்திட வேண்டும் எனவும், தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்திப்பட்டது.

 

 

  ந.நாராயணன் மாநிலத் தலைவர்.  E.மாயமலை மாநில பொதுச்செயலாளர்.  மையத்தின் சார்பில் டி. டெய்சி மாநில பொது செயலாளர் TNAUUS கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 

செய்தியாளர் க.கார்முகிலன்.

 

CATEGORIES
TAGS