கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட இடு பொருட்கள் வழங்கும் முகாம். அரசு கொறடா கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட இடு பொருட்கள் வழங்கும் முகாம் திருப்பனந்தாள் அருகே
கஞ்சனூர் ஊராட்சியில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணைத்தலைவர் கோ.க.அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் மிசாமனோகரன், உதயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை அரசு கொறடா கோவி.செழியன் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். விதை நுண்ணூட்டம், காய்கறி, விதை பயன்பாடு போன்ற வேளான்மைதுறை மூலம் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் வேளாண் இணைஇயக்குனர் நல்லமுத்துராஜா வேளாண் உதவி ஆய்வாளர் ரமேஷ், தோட்டக்கலை ஆய்வாளர் ராஜேஷ்,
ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன்,
துகிலி ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி, கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சிங்காரவேடிவேல் திருமாந்துறை ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.