BREAKING NEWS

காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் 75 நாட்களுக்கு பிறகு திறப்பு.

காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் 75 நாட்களுக்கு பிறகு திறப்பு.

87 லட்சத்து 9 ஆயிரத்து 731 ரூபாய் ரொக்கமும், 808 கிராம் தங்கமும், 897.800 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கை..

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திபெற்றதும், சக்தி பீடங்களில் முதன்மையான பீடங்களில் ஒன்றானதுமான காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் ஏராளமான ஆந்திரா, கேரளா, கர்னாடக உள்ளிட்ட வெளி மாநில, வெளி மாவட்ட பக்தர்கள் மட்டுமன்றி ஏராளமான சுற்றுலா பயணிகளும், வெளி நாட்டவர்களும் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு உண்டியல்களில் பணம், தங்க நகை, வெள்ளி உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

 

அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம்.

 

அந்தவகையில் 75 நாட்களுக்கு பிறகு கோயிலில் உள்ள இரண்டு நிரந்தர உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா முன்னிலையில் திறக்கப்பட்டு கோயில் ஊழியர்களும், தன்னார்வலர்களும் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை
எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

 

இதில் 87 லட்சத்து 9 ஆயிரத்து 731 ரூபாய் ரொக்கமும், 808 கிராம் தங்கமும்,  897.800 கிராம் வெள்ளியும் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.மேலும் இந்த உண்டியல் காணிக்கைகள் அனைத்தும் இந்தியன் வங்கியின் சங்கர மடம் கிளையில் வரவு வைக்கப்பட்டது.

 

இந்த உண்டியல் பணியின் போது காமாட்சி அம்மன் தேவஸ்தான ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர்,செயல் அலுவலர்கள்,இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், உட்பட பலர் உடனிருந்தனர்.

 

CATEGORIES
TAGS