பள்ளிகொண்டா அடுத்த அகரம் சேரி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம் சேரி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது இரண்டு பிரிவினுக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி அம்பேத்கர் நகர் பகுதியில் சேர்ந்த சாமிகண்ணு மகன் இளையராஜா 42 என்பவர் அதே பகுதியில் உள்ள வாட்டர் டேங்க் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இது குறித்து பள்ளிகொண்டா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டார்.
அப்பொழுது காவலர்களை கண்டதும் தப்பியோட முயன்ற இளையராஜாவை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் இளையராஜாவை டைப் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர் மேலும் இது தொடர்பாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.