கம்பம் பள்ளதாக்குப் பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் தொடங்கியது – அதிகப்படியான கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை.
தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11ஆயிரத்து 807 ஏக்கர், தேனிவட்டத்தில் 2ஆயிரத்து 412 ஏக்கர், போடிவட்டத்தில் 488 ஏக்கர் என பதிவுபெற்ற 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல்விவசாயம் நடைபெறுகிறது.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் நவம்பர் மாதம் நடவு செய்யப்பட்ட அம்மன், எம்ஜிஆர், சுவேதா வகை நெல் முதல்போகம் தற்போது அறுவடை தொடங்கப்பட்டுள்ளது.
கம்பம், சுருளிப்பட்டி ரோடு, நாராயணத்தேவன்பட்டி ரோடு, வீரநாயக்கன்குளம், ஒட்டுக்குளம் பகுதி வயல்களில் இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை தொடங்கியுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு அறுவடையில் அரசு கொள்முதல் நிலையத்தில் நல்ல விலைக்கு வாங்கியதால் விவசாயிகள் லாபம் அடைந்தனர். ஆனாலும் கடந்த ஆண்டு ஒரே ஒரு கொள்முதல் நிலையம் அமைந்தால் விவசாயிகள் அதிகப்படியான நேரம் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது.
அதனால் இந்த ஆண்டு அரசு அதிகப்படியான கொள்முதல் நிலையங்களை அமைத்து அதன் மூலம் விவசாயிகள் பயன்பெற செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.