BREAKING NEWS

திருமண வரம் தரும் திருமணஞ்சேரி கோவில் மாசி மக தீர்த்தவாரி, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருமண வரம் தரும் திருமணஞ்சேரி கோவில் மாசி மக தீர்த்தவாரி, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கிராமத்தில் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி, அம்பாளை தரிசித்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

 

இதனால் திருமணம் கைகூட வேண்டி நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு செல்வதும், திருமணம் கைகூடியதும் தம்பதி சமேதராய் கோவிலுக்கு வந்து பூஜைகள் செய்து செல்வதும் வழக்கம். இச்சிறப்புமிக்க இக்கோவிலின் மாசி மக பெருவிழா கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாசி மக தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி,அம்பாள் சோமாஸ்கந்தர் பச்சை நிற பட்டு அம்மன் மஞ்சள் பட்டுடுத்தி திருஆபரணங்கள் அணிந்து பள்ளக்கில் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர்.

 

தொடர்ந்து சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதி உலாவாக விக்ரமன் ஆற்றங்கரைக்கு வந்தடைந்தது.அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத,மங்கள வாத்தியம் இசைக்க அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் செய்யப்பட்டது.

 

பின்பு தீர்த்தவாரி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நிர்மலா தேவி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 

CATEGORIES
TAGS