திருச்சி, திருவெறும்பூர் அருகே அதிமுக நிர்வாகியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மூன்று பேர் கொண்ட கும்பலை துவாக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மகன் கோபி (32)இவர் அதிமுக கட்சியில் நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கோபி டிபன் ஆடர் கொடுத்துவிட்டு சென்றவர் சிறிது நேரம் கழித்து டிப்பனை வாங்க வந்த பொழுது மூன்று பேர் கொண்ட கும்பல் கோபியை அறிவாளார் வெட்டி உள்ளது.
அப்படி வெட்டும் பொழுது அந்த ஹோட்டலில் இருந்த கல்லாப்பெட்டியில் முதல் வெட்டு விழுந்துள்ளது.
அவர்களிடம் இருந்து கோபி தப்பி ஓட முயன்றப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் கோபியை மரித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலை முன் விரோதத்தால் நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா? என தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.