BREAKING NEWS

மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண். சங்கரன்கோவிலில் பரபரப்பு.

மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண். சங்கரன்கோவிலில் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமிபுரம் 1ம் தெருவை சேர்ந்தவர் இசக்கிதுரை இவரது மனைவி சொர்ணம் நிறைமாத கர்ப்பிணி பெண் நேற்று மகப்பேறு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை கொண்டு சென்ற நிலையில் அங்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததின் காரணமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் நிறைமாத கர்ப்பிணியான சொர்ணம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று உயிரிழந்த கர்ப்பிணி பெண் சொர்ணத்தின் உடலை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லக்கூடாது என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

தற்போது ஏற்பட்ட சாலை மறியல் காரணமாக அரை மணி நேரம் சங்கரன்கோவில் – திருநெல்வேலி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனை அடுத்து சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.

 

பின்னர் உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி பெண் சுவனத்தின் உடலை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

CATEGORIES
TAGS