திருச்சி ஸ்ரீரங்கத்தில் நள்ளிரவு சாலையோரம் படுத்திருந்த ஆதரவற்றோர் மீது கார் மோதி விபத்து சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் இருவர் உயிரிழப்பு.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் நள்ளிரவு சாலை ஓரம் படுத்திருந்த யாசகர்கள் மீது மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து.
சம்பவ இடத்தில் இரவு ஒருவர் உயரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழப்பு.
சம்பவத்தில் இரவு கார் ஓட்டி வந்த திருச்சி பாலக்கரை பகுதி சேர்ந்த லட்சுமி நாராயணன் மற்றும் அஸ்வந்த் என்ற இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மற்றும் காவேரி பாலம் பகுதியில் ஆதரவற்றோர் மற்றும் யாசகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுத்து உறங்குவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று இரவு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மாம்பழச்சாலையில் சாலையின் ஓரமாக ஆதரவற்றோர் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் அப்பகுதியில் வந்த கார் ஒன்று தூங்கிக் கொண்டிருந்த கும்பலில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்தில் 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் படுகாயம் அடைந்த இருவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
இதனால் கார் மோதி விபத்துக் குள்ளான சம்பவத்தில் உயிரிழப்பு மூன்றாக அதிகரித்துள்ளது.