BREAKING NEWS

தாருன் நஈம் பள்ளி வாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா.

தாருன் நஈம் பள்ளி வாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தி.பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகிழ்ச்சிகள் நடைபெற்றது.

 

தாருன் நஈம் பள்ளிவாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் மதரசாவில் பயின்று வரும் மாணவர்கள் கலிமாக்கள், குர்ஆன், சூராக்கள், பார்க்காமல் ஓதினர். இதில் சமுதாய ஒற்றுமைக்காவும், ஒற்றுமைக்கான சீர்திருத்த செய்திகளையும் மாணவர்கள் எடுத்துரைத்தனர்.

 

 

27 ஆண்டுகளாக மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி நடைபெற்று வரும் இவ்விழாவில் இவ்வாண்டு விடுப்பு எடுக்காமல் பள்ளிவாசலுக்கு தொடர்ந்து பஜர் தொழுகைக்கு வந்த 12 மாணவர்களுக்கு சைக்கிள்களும் வழங்கப்பட்டது.

 

விழாவில் சிறப்பாக உரையாற்றியவர்களுக்கும், சொற்பொழிவாளர்களையும்,சிறந்த மாணவன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மூன்று மாணவர்ளுக்கு விருதுகளும், முதலிடம் பிடித்த மாணவருக்கு ஐந்தாயிரமும், இரண்டாம் இடம் பிடித்த மாணவருக்கு மூன்றாயிரம், மூன்றாம் இடம் பிடித்த மாணவருக்கு இரண்டயிரமும், ரரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

 

 

இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு ஊர் நாட்டாண்மை, பஞ்சாயத்தார்கள் M.H.ஷாஹுல் ஹமீது, வாஹித், அமீர் அலி, பாரூக், ஜெஹபர் அலி, நஜீமுல்லாஹ், அப்துல் ரஹ்மான், சிறப்பு அழைப்பாளர்களாக ஜம்பு கென்னடி, LDC செந்தில், அசோக் குமார், கமலக்கண்ணன், P.T.துரை,

 

மற்றும் இஸ்லாமிய கல்வி நிலையத்தின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சுற்றுவட்டார கிராமத்திலுள்ள ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியில் ரியாத் அஹமது நன்றி கூறினார். இவ்விழவில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

 

CATEGORIES
TAGS