நல்லூர் ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் திமுக தலைவர், மாண்புமிகு, தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சருமான சி.வெ.கணேசன் அவர்களின் ஆணைக்கிணங்க திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி தெருமுனை கூட்டம் வேப்பூர், நல்லூர், சேப்பாக்கம் ஊராட்சிகளில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினரும்,நல்லூர் வடக்கு ஒன்றி செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.
ஒன்றிய அவைத்தலைவர் பால் கருப்பையா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி, ஒன்றிய துணை செயலாளர்கள் அண்ணாதுரை, மாரிமுத்தாள் குணா, அன்புக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேப்பூர் கூட்டுரோடு பகுதியில் நடைபெற்ற கூட்த்திற்கு கிளை செயலாளர் மோகன்ராஜ், விஜய்,
அரிஈசன் ஆகியோரும், நல்லூர் கூட்டத்திற்கு கிளை செயலாளர் சுப்பு அன்பழகன், மணிவேல் ஆகியோரும் சேப்பாக்கம் கூட்டத்திற்கு கிளை செயலாளர்கள் தண்டபாணி, ஏழுமலை ஆகியோரும் வரவேற்றனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சென்னை சேப்பாக்கம் பகுதி செயலாளர் பிரபாகரன் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் குறித்தும், அவரது வளர்ப்பு, அரசியல் வளர்ச்சி, அவர் பட்ட துன்பங்கள், கொடுமைகள், தற்போது அவரது ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் நகர் சி.சக்திவினாயகம், ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்க நாராயணசாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் நகர் பாபு, நல்லூர் தனசேகரன், வேப்பூர் குணா, வழக்கறிஞர் கருணாநிதி,
மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயபால், ஒன்றிய பொறியாளர் அணி செந்தில்குமார், ஒன்றிய மாணவரணி, மாரிமுத்து, ராஜவேல், ரஜினிகாந்த் பகுதி பொறுப்பாளர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக சேப்பாக்கம் கிராமத்தின் கிளை நிர்வாகிகள் ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி அவர்கள்
நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.