ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகில்அஇஅதிமுக கழகம் சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டையில் தமிழ் நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மீது ஜனநாயகத்திற்கு விரோதமாக தொடுத்த பொய் வழக்குக்கு எதிராக மு.க.ஸ்டாலின் விடியா தி.மு.க. அரசை கண்டித்து, ராணிப்பேட்டை மாவட்டம் அஇஅதிமுக கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
இன்று ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் சட்டமன்றஎதிர்க்கட்சித் துணை கொறடா அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி .,B.A.B.L.,MLA., தலைமையில் மிக எழுச்சியான கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் விடியா திமுக மு.க.ஸ்டாலின் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் (ம) நிர்வாகிகள், மாவட்ட பிற அணி செயலாளர்கள், மற்றும் பிற அணி நிர்வாகிகள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,
நகரமன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளை கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,கழகத் தோழர்கள், இந்த இயக்கத்தின் ஆணி வேராக இருக்கின்ற தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.