நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் ரூபாய் 92 லட்சத்தில் திட்ட பணிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சள் பை விழிப்புணர்வு கொண்டு வர தீர்மானம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரி ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தில் நிலக்கோட்டையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 49.63 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைப்பது எனவும், தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் கீழ் மீனாட்சிபுரத்தில் 43.25 லட்சம் மதிப்பில் வளம் மீட்பு பூங்காவுக்கு செட் அமைக்க நிதி ஒதுக்கப்படுவதாக தீர்மானமும்,
அதேபோன்று பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டு வர தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜோசப் கோவில் பிள்ளை, சாமுண்டீஸ்வரி, முத்துக்குமார், முத்துலட்சுமி, காளிமுத்து, செந்தில்குமார், சிலம்பு செல்வன் உள்பட கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ம.ராஜா.
