BREAKING NEWS

ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழா!

ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழா!

ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.‌ பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

 

தேனி அல்லிநகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சுயம்பு ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயில். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாளன்று ஒரு நாள் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.‌ அதன் படி இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதற்கான கொடியேற்றம் இன்று வீரப்ப அய்யனார் மலைக் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது.

 

நமசிவாய மந்திரங்கள் முழங்க கோயில் பிரகாரம் முன்பாக அமைந்துள்ள மூங்கில் மரத்தில் மஞ்சள் நிற கொடி ஏற்றப்பட்டது. மூலவர் சுவாமிக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.மேலும் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு வீரப்ப அய்யனார் காட்சியளித்தார். அழகு குத்துதல் காவடி மற்றும் பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் இன்று முதல் விரதத்தை துவக்கினர்.

 

 

கொடியேற்ற விழாவை தேனி, அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, அன்னஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS