BREAKING NEWS

புதிய நியாய விலை கடை கட்டிடத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா M.முருகன் திறந்துவைத்தார்.

புதிய நியாய விலை கடை கட்டிடத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா M.முருகன் திறந்துவைத்தார்.

புதிய நியாய விலை கடை கட்டிட திறப்புவிழா.!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாணிக்கபங்கு ஊராட்சி ஆனை கோயில் கிராமத்தில் சுமார் 1000 திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.

 

ஆணைகோயில் பகுதியில் உள்ள மக்கள் நீண்ட தூரம் நியாய விளைக்கடைக்கு சென்று வரவேண்டிய நிலையில் இருப்பதாக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளித்து எங்கள் கிராமத்திற்கு நியாய விளைக்கடை வேண்டும் என்பதை வலியுறுத்தி அளித்த மனுவை ஏற்று புதிய நியாய விளைக்கடை கட்டிடம் அமைத்து திறப்பு திறப்புவிழா நடைபெற்றது.

 

பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புதிய நியாய விலை கடை கட்டிடத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா M.முருகன் திறந்துவைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர்.

 

இதில் மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட குழு உறுப்பினர் துளசிரேகாரமேஷ், செம்பை ஒன்றிய செயலாளர்கள் அமிர்த. விஜயகுமார்,அப்துல் மாலிக், அன்பழகன் மற்றும் மணிமாறன், கணேசன், செந்தில் மற்றும் அரசு அதிகாரிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் க.கார்முகிலன்.

CATEGORIES
TAGS