BREAKING NEWS

வேலூரில் பாரம்பரிய கலை வளர்க்கும் நோக்கத்தில் அரசு அருங்காட்சியகத்தில் சிலம்பம் போட்டிகள் – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு.

வேலூரில் பாரம்பரிய கலை வளர்க்கும் நோக்கத்தில் அரசு அருங்காட்சியகத்தில் சிலம்பம் போட்டிகள் – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு.

வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டையிலுள்ள தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் கண்மணி கலைக்கூடம் என்ற பாரம்பரிய விளையாட்டுகளை பயிற்றுவிக்கும் மையத்தின் சார்பில் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் இம்மையத்தின் சார்பில் சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன.

இதில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு சிலம்பம் போட்டியில் பங்கேற்றனர் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்ச்சியர் சரவணன் மற்றும் சிலம்பம் பயிற்சியாளர் கோபி ஆகியோர் பரிசுகளையும் சான்றுகளையும் வழங்கினார்கள் இதில் பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

 

இதில் சுருள் வாள் சுற்றுதல், சிலம்பம் சண்டை,தனித்திறன் சிலம்பாட்டம் உள்ளிட்டவைகளை செய்து காட்டினார்கள்.

CATEGORIES
TAGS