BREAKING NEWS

பாண்டவர்கள் சமேத திரவுபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த விழா.

பாண்டவர்கள் சமேத திரவுபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த விழா.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் ஒழுகூர் குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பாண்டவர்கள் சமேத திரவுபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து மகாபாரத சொற்பொழிவு மற்றும் மகாபாரத கட்டைக்கூத்து நாடகம் நடைபெற்று வந்தது.

மே மாதம் 1 ந்தேதி அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியும், 15ந்தேதி பால்குட ஊர்வலமும் நடைபெற்றது. தொடர்ந்து 7 ந்தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை அக்னி வசந்த விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி திரவுபதி அம்மன் மற்றும் பஞ்ச பாண்டவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

 

தொடர்ந்து காப்புக் கட்டிய பக்தர்கள் மாரியம்மன் கோவிலில் இருந்து திரவுபதி அம்மன் கோயிலுக்கு மங்களவாத்தியம், பம்பை மேளம் முழங்க ஊர்வலமாக சென்றனர். பின்னர் அக்னி குண்டத்தின் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் அக்னி குண்டத்தில் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தி சுவாமியை வழிபட்டனர்.

இதில் ஒழுகூர் குப்பம் சுற்றுவட்டாரத்தில் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டான்மைக்காரர்கள் கோவில் நிர்வாகிகள் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS