அன்பில் பொய்யாமொழி அவர்களின் 69வது பிறந்தநாள் விழா..

முன்னாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்மான அன்பில் பொய்யாமொழி அவர்களின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்பில் பொய்யாமொழி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கிராப்பட்டி அன்பு நகர் இல்லத்தில் அமைந்துள்ள அன்பில் பொய்யாமொழி அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், மாவட்ட மாநகர நிர்வாகிகள் என்.கோவிந்தராஜ், லீலா வேலு, செங்குட்டுவன், மூக்கன், குணசேகரன், சந்திரமோகன், பொன் செல்லையா, சரோஜினி, நூர்கான், தமிழ்ச்செல்வன்,
மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட மாநகர நகர பகுதி ஒன்றிய பேரூர் கழகங்களின் நிர்வாகிகள் செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.