BREAKING NEWS

வண்டலூர் வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் தீயனைப்பு துறையினர் செயல் விளக்க விழிப்புணர்வு..

வண்டலூர் வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் தீயனைப்பு துறையினர் செயல் விளக்க விழிப்புணர்வு..

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தமிழ்நாடு உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் (ஆராய்ச்சி மற்றும் கல்வி) முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தீயணைப்புத்துறை மாவட்ட ஆலுவலர் ராஜேஷ்கண்ணா உத்தரவின் பேரில் மறைமலைநகர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீ பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்வில் ஒரு வீட்டில் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் தீப்பற்றினால் அதை மேற்கொண்டு தீபரவாமல் முதற்கட்ட நடவடிக்கையாக என்ன செய்யவேண்டும். தீப்பற்றிய பிறகு வீட்டுக்குள் இருப்பவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், எரிவாயு சிலின்டரில் தீப்பற்றினால் தண்ணீர், சனல் கோணிப்பை, அல்லது வாளியால் மூடி அணைக்கவேண்டும்..


அதே போல் தீக்காயம் ஏற்ப்பட்டால் இங்க், எண்ணெய் போன்றவற்றை தீக்காயத்தில் ஊற்றக்கூடாது. தண்ணீரை மற்றும் ஊற்றி முதலுதவி செய்தபிறகு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். தீவிபத்தின் போது இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று ஆராய்ச்சி மற்றும் கல்வி மைய மாணவ மாணவிகள் கண் முன்னே நேரடியாக செயல்முறை விளக்கம் செய்து தீ பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில் மாணவிகள் சிலின்டரில் தீப்பரவினால் எப்படி அனைப்பது எனவும். தீயில் சிக்கியவர்களை எப்படி கைக்கோர்த்து காப்பாற்றுவது என நேரடியாக தீயணைப்பு அதிகாரி முன்னிலையில் செய்து பழகினர். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Share this…

CATEGORIES
TAGS