BREAKING NEWS

யானைகள் தினத்தை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமி யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு:-

யானைகள் தினத்தை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமி யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமி என்ற யானை வளர்ந்து வருகிறது. கோயிலில் ஆயுள் விருத்தி வேண்டி திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் கஜபூஜை செய்து சாமி அம்பாளை தரிசிப்பது வழக்கம்.

இந்நிலையில் ஆகஸ்ட் 12 சர்வதேச யானைகள் தினமான சனிக்கிழமை அபிராமி யானைக்கு சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு யானையிடம் ஆசீர்வாதம் பெற்று பழவகைகள் உள்ளிட்ட உணவுகளை வழங்கினர்.

Share this…

CATEGORIES
TAGS