கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா
அறையபுரம் காவிரி படுகையில் கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடியே 19 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா.திமுக உயர்நிலை செயல்திட்ட உறுப்பினர் கல்யாணம் எம் எல் ஏ ராஜகுமார் ஆகியோர்கள் அடிக்கல் நாட்டை தூங்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து அரையபுரம், மற்றும் கடலங்குடியை இணைக்கும் பகுதியான காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர அப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்தனர்.
இப்ப பகுதி வழியாக வானாதிராஜபுரம், கடலங்குடி, மூவலூர், காளி, திருமங்கலம், அஞ்சார் வார்த்தளை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டிய காவல் நிலையுள்ளது.
பிரதான பகுதியாக இருக்கும் இந்த இடத்தில் இணைப்பு பாலம் கட்டித் தர வேண்டும் என்று பல நாள் அப்பகுதி மக்கள் கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் அறிவிடம் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை மயிலாடுதுறை
சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமாரிடம் கொண்டு சேர்த்தனர்.
(நபார்டு திட்டம்) கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடியே19 லட்சத்து 45,000 மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய பாலம் கட்டித் தர இன்று பூமி பூஜை நடைபெற்றது. திமுக உயர்நிலை செயல்திட்ட உறுப்பினர் கல்யாணம், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார், ஆகியோர்கள் அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் மற்றும் பொறுப்பாளர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.