500 ஏக்கருக்கு மேல் பயிரிட்டுள்ள விவசாய விலை பொருட்களை அறுவடை செய்து பிரதான சாலைக்கு எடுத்து வர முடியாமல் தவிப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மஞ்ப்புத்தூர் மற்றும் மேலப்பட்டு ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேல் விவசாயம் நிலம் உள்ளது,
இந்த விவசாய நிலத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால் விவசாயிகளின் அறுவடை செய்யும்
நெல், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து தானியங்களையும் தலையில் சுமந்தபடி பிரதான தார் சாலைக்கு எடுத்து வர வேண்டிய நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்,
மேலும் விவசாயிகள் அனைவரும் பாதை அமைத்திட அரசுக்கு நிலம் வழங்க முன்வந்த நிலையில் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது எனவே
மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு
விவசாய நிலத்திற்கு செல்ல வயல் வெளிச்சாலை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES கள்ளக்குறிச்சி
TAGS கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி மாவட்டம்சங்கராபுரம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மஞ்ப்புத்தூர்மாவட்ட செய்திகள்விவசாயம்