ஈரோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் செல்லம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் கேபிள் டிவி நலவாரிய தலைவர் திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் குறிஞ்சி சிவகுமார் தலைமை வகித்து, காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வணிகர்களுக்கு போதுமான இடத்தினை ஒதுக்க மாவட்ட நிர்வாகத்திடமும் தமிழக அரசிடமும் கோரிக்கை வைத்து ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த கூட்டத்தில்,
புதிய வணிக வளாகத்தில் மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும் என்றும்
வாழை, மாம்பழங்கள் போன்றவற்றை இயற்கை முறையில் பழுக்க வைப்பதற்காக தனித்தனியாக அறைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வெளி மாநிலங்களில் இருந்து பெரிய வகை லாரிகளில் வரும் வெங்காயம் ஆப்பிள் சாத்துக்குடி போன்றவகைகளை ஏற்றி இறக்குவதற்கு போதுமான இடவசதி செய்து தர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும்,
இந்த வணிக வளாகத்தில் வணிகர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், கடைகளில் பணிபுரியும் வேலையாட்கள் என இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் 24 மணி நேரமும் பணியாற்றும் சூழலில் இருப்பதால் அவர்களுக்கான கழிப்பிட வசதி குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.