சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால பூஜைகள் விடிய விடிய நடைபெற்றது. ஒவ்வொரு காலத்திலும் அபிஷேக பிரியன் எனப்படும் சிவபெருமானுக்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து வில்வம், மலர்கள் ஆகியவற்றால் அர்ச்சனை செய்து சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயம் ஆனந்த தாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரர் ஆலயம், வைஷ்ணவி தேவி வழிபட்ட சேந்தங்குடி பசுபதீஸ்வரர் ஆலயம் உத்திரமாயூரம் எனப்படும் வதானேஸ்வரர் ஆலயம் நீடூர் சோமநாத சுவாமி ஆலயம் ஆகியவற்றில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாட்டில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.