மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக்கொல்லை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக்கொல்லை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாண்டனேரிக்கரையில் ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீபாவாடை ராயன், ஸ்ரீ பைரவி, ஸ்ரீ நாகத்து அம்மன், ஸ்ரீ பாலமுருகன் ஆகிய சக்தி வாய்ந்த தெய்வங்களுடன் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் திருக்கோவில் உள்ளது.மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாசி மாதம் 25 ம் நாள் (8 ம் தேதி) அம்மனுக்கு காப்பு கட்டி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.அதன் பின்னர் மறுநாள் மாசி 26 ம் நாள் மாயான கொல்லையும், மாசி 27 ம் நாள் உச்சி கொப்பரறை விழாவும், மாசி 28 ம் நாள் வீரப்பத்திரர் பட வீதி உலாவும், மாசி 29 ம் நாள் பகல் குறவஞ்சியும், மாசி 30 ம் நாள், குடல் புடுங்கி மாலையும், பங்குனி 1 ம் நாள் மாலை பூச்செறிதல் மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவமும், பங்குனி 2 நாள் புஷ்ப பல்லாக்கு திரு வீதி உலாவும், பங்குனி 3 ம் நாள் மஹா தீர்த்தவாரி பிரமோற்சவ மண்டகபடியும் காலசந்நதி அபிஷேகமும், மாலை 7 மணிக்கு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து புறப்பிட்டு நான்கு மட வீதி வழியாக சென்று மஞ்சள் நீராட்டு நடைப்பெற்றது.இரவு 10 மணி அளவில் வடையாத்தி விழா நடந்தது.இந்த விழாவில் உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை மாஹலெட்சுமி மற்றும் கெங்கேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.