BREAKING NEWS

ஓமலூர் புனித இராயப்பர் சின்னப்பர் திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பெரிய சிலுவைப்பாதை பவனி நடைபெற்றது

ஓமலூர் புனித இராயப்பர் சின்னப்பர் திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பெரிய சிலுவைப்பாதை பவனி நடைபெற்றது

ஓமலூர் புனித இராயப்பர் சின்னப்பர் திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பெரிய சிலுவைப்பாதை பவனி நடைபெற்றது…

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும் 40 நாட்கள் தவக்காலமாக கிறிஸ்தவர்களால் நம்பிக்கையுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதில் கடைசி வாரத்தை புனித வாரமாக கருதி இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமான இன்று புனித வெள்ளியாக உலகம் முழுவதும் அனுசரிக்கின்றனர்.

இதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ஆர்.சி. செட்டிப்பட்டியில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புனித ராயப்பர் சின்னப்பர் திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பெரிய சிலுவை பாதை பவனி நடைபெற்றது.

பங்கு தந்தை ஜோசப் பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பாடுகளை நினைவு கூறும் விதமாக,ஆலய வளாகத்திற்குள் பதினான்கு ஸ்தலங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு ஸ்தலத்திற்கும் ஒரு பக்தர் என மொத்தம் 14 பக்தர்கள் மரத்தினால் ஆன பெரிய சிலுவையை சுமந்து பவனியாக சென்றனர். கிறிஸ்தவர்கள் அவர்களை தொடர்ந்து சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

சிலுவைப் பாதை தியானத்தின் இறுதியில் பேசிய பங்கு தந்தை ஜோசப் பால்ராஜ்,

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு பட்ட துயரங்கள் அனைத்தும் இறுதியில் அன்பை மட்டுமே நமக்கு விட்டுச் செல்வதாகவும் அந்த அன்பை நாம் பிறரிடத்தில் பகிர்ந்து என்றும் மனிதநேயத்துடன் வாழ வேண்டும் என்று கூறி இறை ஆசி வழங்கினார்.

CATEGORIES
TAGS