பிறந்த குட்டியை வனப் பகுதிக்குள் செல்லும் காட்டு யானை காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

முதுமலை- தெப்பக்காடு சாலை ஓரத்தில் குட்டி என்ற காட்டு யானை .பிறந்த குட்டியை அழைத்துக் கொண்டு வனப் பகுதிக்குள் செல்லும் காட்சி. கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான யானைகள் வாழ்ந்து வருகிறது இந்நிலையில் இன்று காலை கூடலூரில் இருந்து தெப்பக்காடு செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பெண் யானை ஒன்று குட்டியை ஈன்றது.பிறந்த அந்த குட்டியுடன் சாலை ஓரத்தில் நீண்ட நேரம் முகாமிட்டிருந்தது.
அப்போது பிறந்த அந்த குட்டி தாயிடம் பால் குடிக்கும் காட்சி அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்தனர்.
நீண்ட நேரம் சாலை ஓரத்தில் பிறந்த குட்டியுடன் முகாமிட்ட அந்த காட்டு யானை நீண்ட நேரத்திற்கு பிறகு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் தனது குட்டியை அழைத்துச் சென்றது. இந்த காட்சி அந்த வழியாக சென்றவர்களை வெகுவாக கவர்ந்தது.