BREAKING NEWS

காட்பாடியில் 100 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பதிவு செய்த சார்பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் மீது பகீர் புகார்!

காட்பாடியில் 100 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பதிவு செய்த சார்பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் மீது பகீர் புகார்!

வேலூர் மாவட்டம், காட்பாடியில் 8. 73 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறுப்பு சார் பதிவாளர் மேலும் 100 ஏக்கர் அரசு நிலத்தை மோசடியாக பதிவு செய்திருப்பது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது .இந்த பகீர் புகார் சிவக்குமார் மீது கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு காலகட்டங்களில் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவுகள் நடந்துள்ளதாக கடந்த ஆண்டு நடந்த தணிக்கையின் போது தெரியவந்தது. குறிப்பாக அரசுக்கு சொந்தமாக 8 .73 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை பலருக்கும் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுள்ளார் சிவக்குமார்.

இப்படி அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளையும் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொறுப்பு சார்பதிவாளராக இருந்த சிவக்குமாரை கடந்த ஜூன் 13ஆம் தேதி சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். இதற்கிடையில் போலி ஆவணம் மூலம் தனிநபர்களுக்கு பதிவு செய்யப்பட்ட 8.73 ஏக்கர் அரசு நிலத்தை கண்டறிந்து மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன .

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறுப்பு சார்பதிவாளர் சிவக்குமார் மேலும் 100 ஏக்கர் அரசு நிலத்தை தான செட்டில்மெண்ட் முறையில் தனியாருக்கு மோசடியாக பதிவு செய்து கொடுத்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக முழு விவரங்களுடன் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறுகையில்: காட்பாடி சார்பதிவாளர் பொறுப்பில் இருந்த சிவக்குமார் 8.73 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை போலியான பதிவு மூலம் பலருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். அவர் பதிவாளராக இருந்தபோது செய்யப்பட்ட பத்திரப்பதிவு விவரங்களை ஆய்வு செய்தபோது காட்பாடி சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட இரண்டு கிராமங்களில் உள்ள 100 ஏக்கர் அரசு நிலத்தை ஒருவர் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு என 15 பேருக்கு தான செட்டில்மெண்ட் முறையில் பதிவு செய்து கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவர் அரசியல் பெரும்புள்ளி என்று கூறப்படுகிறது.

இதற்காக அந்த நபரிடம் சிவக்குமார் குறிப்பிட்ட பெருந்தொகையை லஞ்சமாக பெற்று இதற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 100 ஏக்கர் அரசு நிலத்தை பதிவு செய்தது தொடர்பாக பத்திரப்பதிவு ஆவணங்கள் மற்றும் அதில் இணைக்கப்பட்டு இருந்த ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மோசடியாக பதிவு செய்யப்பட்ட அரசு நிலங்களை மீட்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான அரசு நிலங்களை மோசடியாக பதிவு செய்த விவகாரத்தில் முக்கிய புள்ளிகள் பலர் சிக்குவார்கள் என்ற தகவல்களும் அதிர்ச்சிகரமாக வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல் வெளியாகி ஏதும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் குறிப்பாக காட்பாடியில் பணியாற்றும் சக அலுவலர்கள் கலக்கமடைந்து காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று திமுகவைச் சேர்ந்த அரசியல் புள்ளிகள் பலர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதும் இதில் குறிப்பாக ஒருவர் சிக்குவார் என்பதும் ஊர்ஜிதம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் உப்புத் தின்றவன் தண்ணீர் குடிக்கும் நேரம் வந்துவிட்டது என்றே கூறலாம்.

Share this…

CATEGORIES
TAGS