கரூர் நீதிமன்றத்திsல் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது.
கரூர் நீதிமன்றத்தில் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது.
கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மீதான விவாதங்கள் இன்று நடைபெற்றது.
மூன்று தரப்பு விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றது. இந்த விவாதங்களை செல்போன் மூலம் (வீடியோ கால்) வீடியோ எடுத்து விஜயபாஸ்கரின் உறவினருக்கு தமிழினியன் (29) என்ற இளைஞர் லைவ்வாக வீடியோ அனுப்பிக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து தமிழினியனை பிடித்து மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வை வீடியோ எடுத்த அந்த இளைஞரை காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிமன்ற எழுத்தர் வீரக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வீடியோ எடுத்த தமிழினியனை தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.