பெண்கள் பாதுகாப்பு ஆபத்துக் காலங்களில் அவசர அழைப்பு இலவச தொலைபேசி உதவி எண் 181 குறித்த விழிப்புணர்வு

சின்னசேலத்தில் பெண்கள் பாதுகாப்பு ஆபத்துக் காலங்களில் அவசர அழைப்பு இலவச தொலைபேசி உதவி எண் 181 குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஏ டி எஸ் பி ரமேஷ் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனலட்சுமி சமூக நல தொண்டு அறக்கட்டளை சார்பில் காவல்துறையுடன் இணைந்து பெண்களுக்கான ஆபத்து காலத்தில் தனிமையாக செல்லும்போது யாராவது பெண் தொடர்வது தெரிந்தால், பணி புரியும் இடங்களில் பாலியல் தொல்லைகள்,
ஆண்கள் இருக்கும் இடத்தில் அசௌவுகரிய சூழ்நிலை இருக்கும் பட்சத்தில், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் போது அவர்களை மீட்டெடுக்கும் பொருட்டும், மனநல ஆலோசனை வழங்கும் பொருட்டும், தகவல் தெரிந்தவுடன் காவல்துறை உடனடியாக வந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் பெண்களுக் கான அவசர புகார் அளிக்க கட்டணமில்லா அவசரகால உதவி தொலைபேசி எண் 181 ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பது குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் நிலையம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ, வேன், கார் பள்ளி பேருந்துகள் உள்ளிட்டவைகளில் பெண்களுக்கு ஆபத்தான காலங்களில் இலவச அவசர அழைப்பு எண் 181 குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சியை கள்ளக்குறிச்சி மாவட்ட ஏடிஎஸ்பி ரமேஷ், மற்றும் உட்கோட்ட டிஎஸ்பி தேவராஜ் ஆகியோர் வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தனர்.
இதில் தனலட்சுமி சமூக நலத் தொண்டு அறக்கட்டளை நிறுவனரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளக குழு உறுப்பினருமான டாக்டர்.தனலட்சுமி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்