வேலூர் கஸ்பா புனித விண்ணேற்பு அன்னை பேராலயம், புனித அந்தோணியார் திருத்தலத்தில் ஆண்டு பெருவிழா கோலாகலம்

வேலூர் கஸ்பா புனித விண்ணேற்பு அன்னை பேராலயம் புனித அந்தோணியார் திருத்தலத்தில் ஆண்டு பெருவிழா கோலாகலமாக நடந்தது.
வேலூர் கஸ்பாவில் புனித விண்ணேற்பு அன்னை பேராலயம் புனித அந்தோணியார் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 12ஆம் தேதி சிறப்பு திருப்பலி நடந்தது.
மேதகு ஆயர் முனைவர். அம்புரோஸ் பிச்சைமுத்து வேலூர் மறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் புனித அந்தோணியாரும் நற்கருணையும் என்ற மையக்கருத்தில் உரையாற்றினார்.
அதை அடுத்து 13ஆம் தேதி காலை 7 மணிக்கு புனித அந்தோணியார் திருவிழா சிறப்பு திருப்பலியுடன் நடந்தது. பேரருட்தந்தை டி. பன்னீர்செல்வம் குடியாத்தம் பங்குதந்தை மற்றும் புனித வரலாறு இல்ல தந்தை பேரருட் தந்தை ஏ. பால் மாற்கு ஆகியோர் புனித அந்தோணியாரின் திருப்பயண வாழ்வு பற்றி உரையாற்றினர்.
இதை தொடர்ந்து 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு பெருவிழா திருப்பலி நடந்தது. மறை மாவட்ட முதன்மை குரு பேரருட்தந்தை ஏ.ஜான் நிக்கோலஸ் ஒருங்கிணைந்த திரு அவையின் புதல்வர் என்ற மையக்கருத்தில் உரையாற்றினார். இந்த திருப்பலி உரைக்கு பின்னர் புனிதரின் தேர்ப்பவனியும், கொடி இறக்கமும் நடந்தது.
இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பேரருட்தந்தை முனைவர் ஏ. ராய் லாசர், அருட்தந்தை எல். ஜோசப், அருட்தந்தை ஏ.பிரபு ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர் .இந்த பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டு பெருவிழாவை சிறப்பித்தனர்.