திருவண்ணாமலை அருள்மிகு திரு அண்ணாமலையார் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழாவில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று நடைபெறுகிறது.
இந்த தீபத்திருவிழாவில் இன்று அதிகாலை ஆலயத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அதை தொடர்ந்து இன்று மாலை ஆலயத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அண்ணாமலையார்,உண்ணாமலை அம்மன், சண்டிகேஸ்வர் எழுந்தருள அப்போது ஆண்டிற்கு ஒரு முறை ஒரு நிமிடம் காட்சி தரும் அர்த்தநாரிஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுக்கு காட்சி தர அப்போது 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆலயத்தில் அகண்ட தீபமும் ஏற்றப்பட்டது.
அப்போழுது பக்தர்கள் அண்ணாமைலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற கோஷத்தை எழுப்பி மகா தீபத்தை கண்டு வணங்கி வழிபட்டனர்.
இன்று மாலை ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாட்களுக்கு தீப ஜோதியாக காட்சி அளிக்கும்.
தீபத்திருவிழாவை காண வந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில் கிரிவலம் வந்து அஷ்டலிங்கங்களை வங்கி வழிப்பட்டு வருகிறார்கள்.
