
தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வரும் திமுகவை சேர்ந்த சத்யராஜ் என்பவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள பல கோடி மதிப்பிலான கோவில் நிலத்தினை போலி பத்திரம் மூலம் அவரது மைத்துனருக்கு பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கோயில் நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்து அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தென்காசி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், அந்த புகாரியின் அடிப்படையில் இரு தரப்பினரையும் மாவட்ட பதிவாளர் அழைத்து இன்று விசாரணை நடத்திய நிலையில், அடுத்த கட்ட விசாரணை வருகின்ற பிப்ரவரி மாதம் 9-ம் தேதி நடைபெறும் எனவும், இந்த பத்திரப்பதிவில் மோசடி நடைபெற்றிருந்தால் துறை ரீதியான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் எனவும், தொடர்ந்து பத்திரத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மாவட்ட பதிவாளர் அந்த பகுதி பொது மக்களிடம் உறுதியளித்ததாக
கூறப்படுகிறது.
