TBML 5ஆம் ஆண்டு மாபெரும் பாரம்பரிய உணவு திருவிழா.

செய்தியாளர் க. கார்முகிலன்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் TBML கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக 5-ம் ஆண்டு மாபெரும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவினை கணிதவியல் துறை பேராசிரியர். Dr. ஜோஸ்லின் மனோரா துவக்கி வைத்தார்.

விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர். Dr.கிறிஸ்டி பொன்னி, வரவேற்புரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் Dr. ஜீன் ஜார்ஜ் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், Dr. ஜோப் பிரபாகர், Dr. ஜோசப் வேதகிரி, Dr. ஜோஸ்லின் மனோரா, Dr. ஜோயல் எட்வின்ராஜ், Dr. கணேசன், Dr. ஜூலியஸ் விஜயகுமார் Dr.தெய்வசிகாமணி ஆகியோர்கள் தலைமை வகித்தனர்.

பேராசிரியர் Dr. ஜான்சன் ஜெயக்குமார், IQAC ஒருங்கிணைப்பாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார் பின் இந்த பாரம்பரிய உணவு திருவிழாவை கல்லூரி முதல்வர் Dr. ஜீன் ஜார்ஜ், அவர்கள் திறந்து வைத்தார்கள்.
மாணவர்களால் பல்வேறுபட்ட பாரம்பரிய உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட நுழைவு வாயிலை பேராசிரியர் Dr. தெய்வசிகாமணி அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த பாரம்பரிய உணவு திருவிழாவில் 250க்கும் மேற்பட்ட உணவு பொருட்களை மாணவர்கள் விற்பனை செய்தனர். இதில் பாரம்பரிய போட்டிகளான பாணை உடைத்தல், கயிறு இழுத்தல், பன் தின்னுதல் மற்றும் கோலப்போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.

இறுதியில் பேராசிரியர் Dr. தாமஸ் நித்தியானந்தம், அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியை விலங்கியல் துறை தலைவர். Dr.A. கிறிஸ்டி பொன்னி பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள் மாணவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
