அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு நீடிப்பு- பீகாரில் நடக்கும் முழு அடைப்பில் வன்முறை: வாகனங்களுக்கு தீ வைப்பு.

ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையிலான ‘அக்னிபாத்’ என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் நடந்த போராட்டம் வன்முறையானது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் தான் இளைஞர்கள் அதிகளவில் வன்முைறயில் ஈடுபட்டுள்ளனர். பீகார், உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் போராட்டம் பரவி உள்ளது.
நாடு முழுவதும் 12 ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. தெலுங்கானாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார். போராட்டம் காரணமாக 340-க்கும் மேற்பட்ட ரெயில் சேவை பாதிக்கப்பட் டது.
234 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதையும் படியுங்கள்: பெண் மந்திரி உருவ தோற்றம் கொண்டவரை ஆபாச படம் எடுக்க மிரட்டிய வாலிபர் கைது இந்த போராட்டம் இன்று 4-வது நாளாக வட மாநிலங்களில் நீடித்தது. இந்த நிலையில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அகில இந்தி மாணவர்கள் அமைப்பு 24 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்பின் போது பீகாரில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இன்று காலை போராட்டக்காரர்கள் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை தீவைத்து எரித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதே போல போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பீகாரில் பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
