அக்னிபாத் திட்டத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது,
இந்நிலையில் அக்னிபத் திட்டத்தை கண்டித்தும் உடனடியாக வாபஸ் பெறக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாநகர குழு சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர் மத்திய அரசின் அக்னி பத் திட்டம் ஆர்எஸ்எஸின் திட்டமாக உள்ளது என குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள் இத் திட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
CATEGORIES Uncategorized
