BREAKING NEWS

அடுத்த 4 நாட்களுக்கு 18 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை!!

அடுத்த 4 நாட்களுக்கு 18 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை!!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிவுக்கு வந்துள்ளது. இருந்த போதிலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில்  தமிழகத்தில் இதுவரை இருந்து  வந்த கத்திரி வெயில் காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கடந்த 25 நாட்களாக வாட்டி வதைத்து வந்த கத்திரி வெயில்  சில மாவட்டங்களில் அதிக அளவில் கொளுத்தியது. நடப்பாண்டில் வழக்கத்தை விட அதிகமாகவே வெயில் கொளுத்தியது. நடப்பாண்டில் அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் வேலூர், திருத்தணி, மதுரை, கரூர் உட்பட பல  பகுதிகளில் நிலவியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கேரளாவில் தென் மேற்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ளது. இதனால் அங்கு தொடர் மழை பெய்து வருவதால் தமிழகத்திலும் மழை பெய்யும் வாய்ப்பு அதிகம். இதன் அடிப்படையில்  நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நேற்று மாலையே கனமழை பெய்தது.இதன் தொடர்ச்சியாக இன்று முதல் ஜூன் 2 வரை  தமிழகம் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )