BREAKING NEWS

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு பவானியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு  பவானியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

சென்னையில்  நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனை கொண்டாடும் வகையில் ஈரோடு மாவட்டம், பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவில் பவானி நகர எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் எம்.ஜி. நாத் (எ) மாதையன் தலைமையிலும், எம்ஜிஆர் இளைஞர் அணி நகரச் செயலாளர் கரேத்தா பெரியசாமி, மாவட்ட பிரதிநிதிகளான மம்மிடாடி மூர்த்தி, மோகன் ஆகியோர் முன்னிலையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

முன்னதாக கட்சி நிர்வாகிகள் ஒன்றாக கூடி இபிஎஸ் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பஸ் பயணிகள், பாதசாரிகள், பொதுமக்கள், வியாபாரிகள் என பலருக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ், முன்னால் கவுன்சிலர் ஆண்டியப்பன், பூக்கடை மாது, ஐ.டி.விங். மாவட்ட துணைச் செயலாளர் கார்த்தி, மகளிர் அணி நிர்வாகி குஞ்சம்மாள், உட்பட அதிமுக பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )