அத்தையை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த மருமகன்!! தட்டித் தூக்கிய காவல்துறை!!

கடலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் 80 வயதான அஞ்சலை பாட்டி. இவர் உறவுகள் யாரின் துணையின்றி தனியாக வசித்து வருகிறார். இவர் ஜூன் 5 ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இவர் குடியிருந்த பகுதியில் சிசிடிவி ஏதுமில்லை. மேலும் கிடைத்த கைரேகையும் பழைய குற்றவாளிகளுடன் ஒத்துவராத காரணத்தால் கொலையாளியை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. மூதாட்டி தனியாக வசிப்பதை அறிந்த உறவினர்கள் யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், சம்பவம் நடந்த தினத்தன்று கடலூரில் வசிக்கும் அஞ்சலையின் அண்ணன் மகன் கந்தவேலின் மகன் சுரேஷ் (50) என்பவரின் செல்போன் எண் அந்த பகுதியில் உள்ள செல்போன் டவர் காட்டியது. இவர் தான் கடைசியாக வீட்டிற்கு வந்து சென்றதும், தலைமறைவாக இருந்தும் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் ஆன சுரேஷ் மதுபழக்கத்துக்கு அடிமையானதால் மனைவியும் குழந்தைகளும் பிரிந்து சென்று விட்டனர். மது குடிப்பதற்காக சுரேஷ் தன் தந்தையிடமே அவ்வபோது திருடி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது தந்தையிடம் பணம் எடுக்க முடியாத காரணத்தால், புதுச்சேரியில் தனியாக வசித்து வந்த தனது அத்தை வீட்டிற்கு வந்துள்ளார். நலம் விசாரிப்பதுபோல நடித்து அவரிடம் இருந்த நகைகளை பறித்து செல்ல திட்டமிட்டுள்ளார்.