அந்தியூரில் மது போதையில் கார் ஓட்டி ரகளையில் ஈடுபட்ட வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு.

அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் அந்தியூர் போக்குவரத்து காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்த முயன்றனர் கார் நிற்காமல் சென்றதால் போலீசார் துரத்தி வந்து அந்தியூர் சந்தை பகுதியில் காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரை ஒட்டி வந்த கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் வயது 21 என்பவர் மது போதையில் கார் ஓட்டி வந்தது தெரியவந்தது மேலும் அவர் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து ரகளையில் ஈடுபட்டார் உடனடியாக அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
