அந்தியூரில் ஹோட்டலில் மதுபானம் விற்ற ஹோட்டல் ஊழியர் கைது உரிமையாளர் தலைமறைவு.

அந்தியூர் செய்தியாளர் பா. ஜெயக்குமார்.
ஈரோடு மாவட்டம்,
அந்தியூர் பவானி ரோட்டில் செயல்பட்டு வரும் தனபால் ஓட்டலில் மதுபானங்கள் விற்கப்படுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் தனபால் ஹோட்டலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான மதுபான மது பாட்டில்கள் 213 பறிமுதல் செய்து பணம் ரூ 9100 பறிமுதல் செய்தனர் ஹோட்டல் ஊழியர் சுதந்திர ராஜ் என்பவரை கைது செய்தனர் மேலும் தலைமறைவான ஹோட்டல் உரிமையாளர் தனபாலை போலீசார் தேடி வருகின்றனர்.
இதே போன்று அந்தியூர் வெள்ளையம்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில்,

அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் மளிகை கடையில் சோதனை நடத்தி கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ஆறு கிலோ அளவுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து மளிகை கடை உரிமையாளர் சேகர் என்பவரை கைது செய்தனர்.
ஹோட்டல் ஊழியர் சுதந்திர ராஜ் மளிகை கடை உரிமையாளர் சேகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
