அந்தியூர் அருகே பள்ளி பேருந்தை வழிமறித்து சாவியை எடுத்துச் சென்ற அரசு மருத்துவர் மீது நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு.
அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவர் சரவணபிரபு இவர் கடந்த 23ஆம் தேதி பணிக்கு வரும்பொழுது சுமைதாங்கி என்ற இடத்தில்,
மங்களம் பள்ளி வேன் எதிரே வந்த போது கெட்டி சமுத்திரம் ஏரியின் உபரி நீர் மருத்துவர் மீது தெரித்துபட்டு விட்டதாக கூறி கெட்டி சமுத்திரம் ஏரியின் கரையின் மீது மங்களம் பள்ளி வாகனத்தை வழிமறித்து குழந்தைகள் உள்ளே இருப்பதை கூட அறியாமல் சாவியை எடுத்துச் சென்று விட்டார்.
இதுகுறித்து பள்ளி பேருந்து ஓட்டுனர் குமரவேல் அளித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் டாக்டர் சரவண பிரபு மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
CATEGORIES ஈரோடு
TAGS ஈரோடு அந்தியூர்ஈரோடு மாவட்டம்எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்