அந்தியூர் அருகே பொது பாதை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தரக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மைக்கேல் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த துணை வட்டாட்சியர் ஜெகநாதன் மற்றும் அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் பேச்சுவார்த்தையில் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி பாதையை அளந்து ஆக்கிரமிப்பை அகற்றி தர அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
CATEGORIES முக்கியச் செய்திகள்