அந்தியூர் வடக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவர் ராமதாஸ் 84 பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 84 ஆவது அகவை தினம் அந்தியூர் வடக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கிருஷ்ணாபுரம் பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் சி ஆர் கோபால் கலந்துகொண்டு பாட்டாளி மக்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணாபுரம் பிரபாகரன் வடக்கு ஒன்றிய தலைவர் கோபால். இளைஞரணி தலைவர் முருகேஷ் செங்கோட்டையன் டிபி நடராஜ் ரமேஷ் செந்தில்குமார் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES Uncategorized
