‘அனைவரின் வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுங்கள்’ – பிரதமர் மோடி வேண்டுகோள்!

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற 75 -வது ஆண்டினை கொண்டாடும் விதமாக, ‘சுதந்திர ஆண்டின் அமுதப் பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். வீடுகளில் தேசியக் கொடியேற்றும் இந்த இயக்கம், தேசியக்கொடியுடனான நமது பிணைப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
TAGS தலைப்பு செய்திகள்
