BREAKING NEWS

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி  தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு.

தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியின் தேனி மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் அமைப்புசாரா ஓட்டுணரனி மாவட்ட செயலாளர் வெற்றி வேலன் ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டது .

இந்நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார் . வடக்கு தெற்கு ஒன்றிய செயலாளர்கள் தவச்செல்வம் மற்றும் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.

 

டிடிவி தினகரன் பிறந்தநாளை ஒட்டி பாண்டியர்கால பழமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது . இதையடுத்து கோயிலுக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .

 

இந்த நிகழ்ச்சியில் தேனிமாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் , ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான அமமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )