அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் 8 மணி நேரம் விசாரணை: 14 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை திடீர் நடவடிக்கை.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் தி.மு.க அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2006-ம் ஆண்டு தமிழக காவல்துறை உளவுப்பிரிவு ஐ.ஜி-யாக இருந்த ஜாஃபர் சேட், தனக்கு வழங்கப்பட்ட வீட்டுவசதி வாரிய மனையை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் ஜாஃபர் சேட்-க்கு வீட்டுவசதி வாரிய மனையை ஒதுக்கிய விவகாரத்தில் அப்போதைய வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி மீதும் குற்றசாட்டப்பட்டது. ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாகக் கூறி தற்பொழுது அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்