BREAKING NEWS

அரசின் திட்டங்கள் குறித்து எஃகு மற்றும் ஊரக வளர்ச்சி துறை இணை அமைச்சர் தலைமையில் ஊரக வளர்ச்சி முகாம் நடைபெற்றது.

அரசின் திட்டங்கள் குறித்து எஃகு மற்றும் ஊரக வளர்ச்சி துறை இணை அமைச்சர் தலைமையில் ஊரக வளர்ச்சி முகாம் நடைபெற்றது.

 

தேனி செய்தியாளர் முத்துராஜ்.

 

தேனி மாவட்டத்தில் செயல்படுத்தபட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எஃகு மற்றும் ஊரக வளர்ச்சி துறை இணை அமைச்சர் தலைமையில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்.

 

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் எஃகு மற்றும் ஊரக வளர்ச்சி துறை மத்திய இணை அமைச்சர் ஃபக்கன்சிங் குலாஸ்தே தலைமையில் நடைபெற்றது.

 

 

இதில் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம், முத்ரா மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி திட்டம்,பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம், தூய்மை இந்தியா திட்டம், ஆயுஸ்மான் பாரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும்,

 

 

அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பயனாளிகளின் விபரங்கள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் முறை ஆகிய பல்வேறு அம்சங்கள் குறித்தும் அமைச்சர் கலந்தாலோசித்தார். பின்னர் மகளிர் சுய உதவி பெண்களுடன் கலந்துரையாடினார்‌.

 

முன்னதாக மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்த உற்பத்தி பொருட்களின் கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.

 

 

இந்த ஆய்வு கூட்டத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், மாவட்ட ஆட்சியர் முரளிதரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே, மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )